Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் ஆறு இடங்களில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி

Print PDF

தினமலர் 21.09.2010

சென்னையில் ஆறு இடங்களில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி

சென்னை:"பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, சென்னையில் ஆறு இடங்களில் போடப்படுகிறது' என, மாநகர மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சி சார்பில், சென்னையில் உள்ள ஆறு பகுப்பாய்வு கூடங்களில், பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி போடும் திட்டத்தை, வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி பகுப்பாய்வு கூடத்தில் மேயர் சுப்ரமணியன் நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:பொதுமக்களும், சிறுவர்களும் பன்றிக் காய்ச்சல் நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, இரண்டு செயல்களை அவசியம் பின்பற்ற வேண்டும். ஒன்று, கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

மற்றொன்று, வெந்நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.சென்னை மாநகராட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள பகுப்பாய்வு கூடம், .வெ.ரா., சாலை பகுப்பாய்வு கூடம், சூளை செல்லப்ப முதலி தெருவில் உள்ள பகுப்பாய்வு கூடம், சைதாப்பேட்டை கருணாநிதி வளைவு அருகில் உள்ள பகுப்பாய்வு கூடம், திருவான்மியூர் கிழக்கு தெரு காமராஜர் அவென்யூவில் உள்ள பகுப்பாய்வு கூடம், பெரம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள மாநகராட்சி ரத்தப் பரிசோதனை நிலையம் ஆகிய ஆறு இடங்களிலும் மாநகராட்சி சார்பில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி போடப்படுகிறது.சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டைக் காட்டிலும், இந்த பகுப்பாய்வு கூடங்களில் மூக்கு மூலம் தெளிக்கப்படும் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிக்கு 100 ரூபாயும், ஊசி மூலம் போடப்படும் தடுப்பூசிக்கு 200 ரூபாயும் என, குறைந்த விலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போடப்படுகிறது.தடுப்பூசிகள் போடப்படும் இந்த ஆறு இடங்களிலும் காலை 8 முதல் மாலை 3 மணி வரை போடப்படுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் இலவசமாக போடுவது பற்றி அரசின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக போடப்படும்.இவ்வாறு சுப்ரமணியன் பேசினார்.