Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பன்றிக்காய்ச்சல் பீதி எதிரொலி கொசு ஒழிக்கும் பணி இன்று துவக்கம் விழுப்புரம் நகராட்சி தீவிரம்

Print PDF

தினகரன் 23.09.2010

பன்றிக்காய்ச்சல் பீதி எதிரொலி கொசு ஒழிக்கும் பணி இன்று துவக்கம் விழுப்புரம் நகராட்சி தீவிரம்

விழுப்புரம், செப். 23: பன்றிக்காய்ச்சல் பீதி எதிரொலி யால் விழுப்புரம் நகராட்சியில் இன்று முதல் கொசு ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல், டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற நோய் களை கட்டுப்படுத்துவதற்கு கொசுக்களை ஒழிப்பதற் கான ஆலோசனைக்கூட் டம் விழுப்புரம் நகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நகர்மன்ற தலைவர் அலுவலகத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் சிவக்குமார், பூச்சியியல் ஆய் வாளர் முனுசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையா ளர் சிவகுரு, சுகாதார ஆய் வாளர் மூர்த்தி, கவுன்சிலர்கள் ஸ்ரீவினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய நகர்மன்ற தலைவர் ஜனகராஜ், விழுப்புரம் நகராட்சியில் கொசுக்களை ஒழிக்க 15 பேர் குழு அமைக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் கொசுமருந்து அடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேங்காய் ஓடு, பாட்டில்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படும். தொடர்ந்து 6 நாட்களுக்கு 36 வார்டுகளிலும் புகை மருந்து அடிக்கப்படவுள்ளது.

நகரில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் கொசுக்கள் வராமல் இருக்க ஆயில்பால் போடப்படும். முக்கியமாக மசூதி, கோயில்கள், பள்ளக்கூடங்கள் போன்ற இடங்களில் பரவலாக கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்றார்.

பின்னர் சுகாதாரத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறிகள் 12பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த 12 பேரோடு தொடர்புடைய உறவினர்கள், நண்பர்களை கண்டறிந்து சுமார் 70 பேருக்கு மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் போதுமான அளவுக்கு மாத்திரைகள் உள்ளது என்று தெரிவித்தார்.