Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பன்றி காய்ச்சல் தடுப்பூசி போடுவதற்கு தனி இடம்

Print PDF

தினகரன் 23.09.2010

பன்றி காய்ச்சல் தடுப்பூசி போடுவதற்கு தனி இடம்

தர்மபுரி, செப்.23: தர்மபுரி நகரமன்ற கூட்டம் தலைவர் ஆனந்த குமார் ராஜா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஆணையாளர் அண்ணா துரை, கவுன்சிலர்கள் நாட்டான் மாது, சந்திரமோகன், வேணுகோபால், மாது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

நகராட்சி வார்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் ரூ12 லட்சத்தில் 14 பிளாஸ்டிக் டேங்க் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகர சாலை ஓரங்களில் இரவை பகலாக்கும் வகையில் ரூ25 லட்சத்தில் லைட் வெளிச்சம் ஏற்படுத்தப் பட உள்ளது. இதற்கான நிதி சென்னை நகர ஊர் அமைப்பு இயக்குனரிடம் கேட்கப்பட்டுள்ளது. நகர பகுதியில் உள்ள குமாரசாமிபேட்டை, சந்தைப்பேட்டை நடுநிலைப்பள்ளி, உருது பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், மராமத்து பணிகள் மேற்கொள்ளவும் ரூ22லட்சம் நிதி ஒதுக்கீடு கேட்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தி.மு.. கவுன்சிலர் சந்திரமோகன் பேசும்போது, பன்றி காய்ச்சல் தொற்று நோயால் தமிழகத்தில் உயிர்பலி ஏற்படுகிறது. அதை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் பன்றி காய்ச்சலுக்கான தடுப்பூசி மற்றும் மருந்து வழங்கப்படுகிறது. அந்த மாதிரி மருந்துகளை தர்மபுரி நகராட்சி பகுதியில் வழங்க தனி இடத்தை ஒதுக்கி தரவேண்டும் என்று பேசினார். அதற்குபதில் அளித்து தலைவர் பேசு கையில், பன்றிகாய்ச்சலுக்கான தடுப்புஊசி தர்மபுரி நகராட்சிக்கு இன்னும் வரவில்லை. வந்தபிறகு மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி தனி யாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

தர்மபுரி கவுன்சிலர் கோரிக்கை

கிருஷ்ணகிரியில் நடந்த தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் கறிக்கோழி வளர்ப்போர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினர். உள்படம்: சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ராமகவுண்டர் பேசினார்.