Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை

Print PDF

தினமணி 23.09.2010

கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை

விழுப்புரம், செப்.22: பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் மத்தியில் பீதி நிலவுவதால், விழுப்புரம் நகரில் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத் துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

÷நகர்மன்றத் தலைவர் இரா. ஜனகராஜ் கூறியது: மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பன்றிக் காய்ச்சல் பீதியை போக்கவும், கொசுவை ஒழிக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

÷இதில் வியாழக்கிழமை முதல் 6 நாள்களுக்கு கொழி ஒழிப்பு புகைமருந்து அடிக்கப்படும். இது மாதத்துக்கு ஒருமுறை செய்யப்படும்.

÷நகரில் உள்ள குட்டைகளை கண்டறிந்து 25-ம் தேதி முதல் ஆயில்பால் போடப்படும். இதில் உள்ள எண்ணெய் தண்ணீர் மேல் படிந்தால், கொசு உற்பத்தி தடுக்கப்படும். ÷அதேபோல் திறந்தவெளிக் கிணறுகளில் கொசு முட்டைகளை சாப்பிடும் கம்பூசியா மீன்கள் விடப்படும். மசூதி, கிறிஸ்துவ தேவாலயம், கோயில், பள்ளிகள் ஆகிய இடங்களில் புகைமருந்து அடிக்கப்படும் என்றார்.

÷பன்றிக்காய்ச்சல் குறித்து துணை இயக்குநர் கே. கிருஷ்ணராஜ் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தில் 12 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. ÷அவர்களுக்கும், அவர்களின் உறவினர்கள், நெருங்கிப் பழகியவர்கள் என கண்டறியப்பட்ட 70 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

÷யாருக்கேனும் தொண்டை கரகரப்பு, கடுமையான காய்ச்சல் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். பன்றிக் காய்ச்சலுக்குத் தேவையான மாத்திரைகள் இருப்பு உள்ளது என்றார்.

÷இதில் பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் கே. கிருஷ்ணராஜ், நகர்மன்றத் தலைவர் இரா. ஜனகராஜ், ஆணையர் அ.க. சிவக்குமார், மாவட்ட பூச்சியியல் அலுவலர் முனுசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சி. சிவகுரு, மலேரியா ஆய்வாளர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.