Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினமலர் 24.09.2010

காலாவதியான குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

சிவகாசி : திருத்தங்கல் நகராட்சி செயல் அலுவலர் கவுதமன், பொது சுகாதார துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆலோசனைபடி, கடைகளில் தண்ணீர் பாக்கெட், குடிநீர் டேங்கர் லாரிகளில் ஆய்வு செய்ய உத்தரவிட்டனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில், ஆய்வாளர் பூவேந்திரன் அழகுமுத்து ஆகியோர் நகரில் 12 கடைகளில் காலாவதியான 500 குடிநீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

இதேபோல் குடிநீர் விற்பனை செய்த 12 டேங்கர் லாரிகளையும் சோதனை செய்தனர். இந்த தண்ணீரில் குளோரினேசன் இன்றி தண்ணீர் இருந்ததை கண்டுபிடித்தனர். 1000 லிட்டருக்கு நான்கு கிராம் வீதம் பிளிச்சிங் பவுடர் கலந்து வி னியோகிக்க வேண்டும் என எச்சரித்து அனுப்பினர். சுகதாரமற்ற குடிநீர் விற்பனை செய்வோர் மீது பொது சுகாதார சட்டப்படி வழக்கு தொடரப்படும் என நகராட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.