Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பன்றி காய்ச்சல் தடுப்பு தீவிரம் மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு டாமிபுளூ மாத்திரை வினியோகம்

Print PDF

தினகரன் 24.09.2010

பன்றி காய்ச்சல் தடுப்பு தீவிரம் மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு டாமிபுளூ மாத்திரை வினியோகம்

கோவை, செப் 24: கோவை மாநகரில் பன்றி காய்ச்சல் பரவினால் உடனடி தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவமனைகளுக்கு 5 ஆயிரம் டாமிபுளூ மாத்திரை வினி யோகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை வரை 37 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 20 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். புறநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநரகம் முடுக்கி விடப்பட்டுள்ளது. தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி பகுதியில் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் மாநில சுகாதாரத்துறை இணை இயக்குநர் அமுதாதேவி, மாநகரா ட்சி நல அலுவலர் அருணா மற்றும் மாநகராட்சி மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர். புறநகர் பகுதிகளை போல் மாநகராட்சியில் பன்றி காய்ச்சல் பாதிப்புள்ளவர்கள் வெகு குறைவு. பன்றி காய்ச் சல் அறிகுறி கண்டறியப்பட்ட புலியகுளம், சாய்பாபா காலனி போன்ற பகுதிகளில் வீடு, வீடாக சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள் ளது.

பின்னர் இணை இயக்குநர் அமுதாதேவி கூறுகை யில், "மாநகராட்சி பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆனாலும் பரவா மல் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மாநகராட்சி மருத்துவமனைகளில் மட்டும் டாமிபுளூ மாத்திரை 5 ஆயி ரம் இருப்பு வைக்கப்பட்டுள் ளது. இது போதுமானதாகவே இருக்கும். தேவைப்பட்டால் மேலும் வழங்கு வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன," என்றார்.

பள்ளிகளுடன் இன்று ஆலோசனை:

பன்றி காய்ச்சல் அதிக பாதிப்பு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கே ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் 12 வயதுக்குட்பட்டவர்கள் அதிகளவில் மருத்துவமனைக ளில் சிகிச்சை பெறுகின்றனர். பள்ளிகளில் குழந்தைகளுக்கு தேவையான தடு ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது, முன்னெச்சரிக் கை பரிசோதனை நடத்துவது, பாதிக்கப்பட்டவர்க ளுக்கு விடுப்பு அளிப்பது குறித்து இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி முதல்வர்கள் பங்கேற்கும் ஆலோ சனை கூட்டம் நடக்கிறது.