Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி ஊழியர்களுக்கு நீரிழிவு நோய் கண்டறியும் முகாம்

Print PDF

தினமணி 29.09.2010

நகராட்சி ஊழியர்களுக்கு நீரிழிவு நோய் கண்டறியும் முகாம்

விழுப்புரம், செப். 28: விழுப்புரம் நகராட்சி ஊழியர்களுக்கு நீரிழிவு நோய் கண்டறிதல் முகாம் நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

÷விழுப்புரம் அரிமா குடும்பம் மற்றும் நகராட்சி இணைந்து நடத்திய இந் நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவர் ஆர்.குபேரன் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் இரா.ஜனகராஜ் தொடங்கி வைத்தார். உஸ்மான் டயாபெடிக் சென்டர் டாக்டர் எச். பஷீர்அகமது, நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள், தடுப்பு முறைகள், உணவு முறைகள் குறித்து நகராட்சி ஊழியர்களுக்கு விளக்கினார். பின்னர் சுமார் 50 ஊழியர்களுக்கு நீரிழிவு பரிசோதனை செய்யப்பட்டது.

÷தொடக்க நிகழ்ச்சியில் செயலர் வி.மகேஷ் வரவேற்றார். மாவட்டத் தலைவர் எம்.முத்துமாணிக்கம். அரிமா நிர்வாகிகள் ஏ.கோபி, எம்.பி.வடிவேல், டி.பழனியப்பன், ஏ.ராஜேந்திரன், ஏ.பி.நீலமேகவண்ணன், எம்.சரவணன், எம்.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

÷நகராட்சி ஆணையர் அ.க.சிவக்குமார், பொறியாளர் கு.பார்த்தீபன், பணி மேற்பார்வையாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எம்.அழகப்பன் நன்றி கூறினார்.