Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அக்டோபர் 2-ந் தேதி முதல் ஏழைகளுக்கு இலவசமாக பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி 10 லட்சம் பேருக்கு போட ஏற்பாடு

Print PDF

மாலை மலர் 29.09.2010

அக்டோபர் 2-ந் தேதி முதல் ஏழைகளுக்கு இலவசமாக பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி 10 லட்சம் பேருக்கு போட ஏற்பாடு

அக்டோபர் 2-ந் தேதி முதல்
 
 ஏழைகளுக்கு இலவசமாக 
 
 பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி
 
 10 லட்சம் பேருக்கு போட ஏற்பாடு

சென்னை, செப். 29- தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து, தடுப்பூசி குறைந்த விலையில் போடப்பட்டு வருகிறது.

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், மாநகராட்சி மருத்துவமனை மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இலவசமாக போடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது எப்போது நடைமுறைக்கு வரும் என்று சுகாதாரதுறை செயலாளர் சுப்புராஜிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்தை புனேயில் உள்ள ரத்த பரிசோதனை மையம் மற்றும் ஆமதாபாத் தனியார் தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து ரூ. 15 கோடிக்கு வாங்க டெண்டர் கேட்கப்பட்டுள்ளது.

1-ந் தேதி டெண்டர் திறக்கப்பட்டு முடிவாகிவிடும். எனவே 2-ந் தேதியில் இருந்து ஏழைகளுக்கு இலவசமாக தடுப்பு ஊசி போட ஏற்பாடு செய்யப்படும்.

முதல்கட்டமாக 10 லட்சம் ஏழைகளுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேசன் கார்டு போன்றவற்றை காட்டி இலவசமாக தடுப்பூசி போடலாம்.

இவ்வாறு சுப்புராஜ் கூறினார்.

பன்றிக்காய்ச்சல் உறுதி யாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1019-ஐ தாண்டி விட்டது.

சென்னை, கோவை, வேலூர், கடலூர், கன்னியா குமரி ஆகிய 5 மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இங்கு முதல் கட்டமாக அதிக அளவில் தடுப்பூசி போட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.