Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டுக்கல்லில் பன்றிகள் தொல்லை பிடிக்க சுகாதாரப்பிரிவின் தனிப்படை

Print PDF

தினமலர் 30.09.2010

திண்டுக்கல்லில் பன்றிகள் தொல்லை பிடிக்க சுகாதாரப்பிரிவின் தனிப்படை

திண்டுக்கல் : திண்டுக்கல் நகராட்சி பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்க சுகாதார பிரிவு ஊழியர்கள் அடங் கிய தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் நகரில் தெருக்களில் சாக்கடை தோறும் பன்றிகளின் புகலி டமாக உள்ளது. அரசு ஆஸ் பத்திரி, குளங்களில் ஏராள மான பன்றிகள் உள்ளன. ரோட்டில் சர்வ சாதார ணமாக உலாவரும் இவற் றை பிடிக்கும் நட வடிக் கையில் நகராட்சி இறங்கி யுள்ளது. சிறப்பு படை: நகர் நல அதிகாரி வரதராஜன் தலை மையில் 3 சுகாதார ஆய் வாளர்கள், துப்புரவு பணி யாளர்கள் கொண்ட சிறப்பு படை அமைக்கப்பட்டுள் ளது.

நகரில் சுற்றிதிரியும் பன்றிகளை பிடிப்பது, உணவு கலப்படத்தை கண்டுபிடிப்பது, சுகாதார பாதிப்பு குறித்து வரும் புகார்களை நிவர்த்தி செய்வது இப்படையின் முக்கிய பணியாகும். நேற்று இப்படையினர் நடத்திய வேட்டையில் 15 பன்றிகள் சிக்கின. இவை நகராட்சி எல்லை யை தாண்டி விடப்பட்டன. பன்றி பிடிக்கும் பணி தொடரும் என நகராட்சி தெரிவித்துள்ளது.