Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரையில் பன்றிக்காய்ச்சல் சிறப்பு பயிற்சி முகாம்

Print PDF

தினகரன் 01.10.2010

மதுரையில் பன்றிக்காய்ச்சல் சிறப்பு பயிற்சி முகாம்

மதுரையில் பன்றிகாய்ச்சல் தடுப்பு சிறப்பு பயிற்சி முகாம் 4 நாட்கள் நடக்கிறது. தமிழகம் முழுவதும் பன்றிக்காயச்சல் பரவலாக உள்ளது. மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பன்றி காய்ச்சல் தடுப்பு சிறப்பு பயிற்சி முகாம் வரும் 4ம் தேதி துவங்கி 7ம் தேதி வரை நடக்கிறது. மதுரை மாநகராட்சி, புறநகர் அரசு மருத்தவமனை, ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பணியாற்றக்கூடிய அரசு டாக்டர்கள், நர்ஸ்கள், மருந்தாளுனர்கள், கடைநிலை ஊழியர்களுக்கு பன்றிகாய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. நோயை கண்டுபிடிக்கும் விதம், முன்கூட்டியே தடுத்தல், வந்த பிறகு மருந்து வழங்குதல் குறித்த பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சியை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஜெரால்டு வழங்குகிறார். தனியார் மருந்து நிறுவனங்கள் சார்பில் குறைந்த விலையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படும். இத்தகவலை மதுரை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமார் தெரிவித்தார்.

Last Updated on Friday, 01 October 2010 12:02