Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோபி பகுதியில் கொசுஒழிக்கும் பணி தீவிரம்

Print PDF

தினமலர் 04.10.2010

கோபி பகுதியில் கொசுஒழிக்கும் பணி தீவிரம்

கோபிசெட்டிபாளையம்: கோபி பகுதிகளில் காய்ச்சலை கட்டுப்படுத்த கொசு அழிக்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.கூகலூர், அயலூர், சிறுவலூர் மற்றும் கோட்டுபுள்ளாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அனைத்து கிராமங்களிலும் தீவிர காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டாக்டர் பாரதி தலைமையில் 28 நர்ஸ், இரண்டு வாரத்தில் 4,182 வீடுகளில் சோதனை செய்யப்பட்டது. இதில், 1,318 வீடுகளிலும், 2, 656 கண்டெய்னர்களிலும் இருந்த கொசுப்புழுக்கள் நீக்கம் செய்யப்பட்டது.கொளப்பலூர் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. கோபியை அடுத்த பெருந்தலையூர் மற்றும் பி.மேட்டுபாளையத்தில் பொதுமக்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பன்றிகளை வளர்த்த மூன்று நபர்களுக்கும், பன்றி கடை நடத்தி வந்த ஒரு நபருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏழு நாட்களுக்குள் குறைகளை களையாவிட்டால் 1939ம் ஆண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொசு ஒழிப்பு முகாமில் சுகாதார மேற்பார்வையாளர் செல்வன், ஆய்வாளர்கள் மாரிமுத்து, ரகுபதி, ஆறுச்சாமி, முருகேசன், வீராச்சாமி, தண்டபாணி, சுப்ரமணியம், மனோகரன் உள்பட பலர் சென்றனர்.