Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இலவசம்

Print PDF

தினமணி 07.10.2010

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இலவசம்

சேலம், அக். 6: சேலம் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

÷சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சலுகைக் கட்டணத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடும் பணியை புதன்கிழமை காலை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

÷பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்துகள் இன்ஹேலர், தடுப்பூசி என இரண்டு வகைகளாக உள்ளன. இதில் இன்ஹேலர்கள் வெளி மார்க்கெட்டில் ரூ 200 முதல் ரூ 400 வரையிலும், தடுப்பூசிகள் ரூ 400 முதல் ரூ 600 வரையிலும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் பொதுமக்களுக்கு சலுகை விலையில் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு சார்பில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்ஹேலர்கள் ரூ 115-க்கும், தடுப்பூசி ரூ 225-க்கும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினசரி காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இங்கு தடுப்பூசி போடப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்குவது குறித்து அரசு திட்டமிட்டு வருகிறது. அடுத்த ஒரு வாரத்தில் இலவச தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் ஆட்சியர்.

Last Updated on Friday, 08 October 2010 07:45