Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டாக்டர் ஆலோசனை பெறாமல் மாத்திரை சாப்பிடக்கூடாது: 3 வகையான பன்றிக் காய்ச்சல்

Print PDF

மாலை மலர் 19.08.2009

டாக்டர் ஆலோசனை பெறாமல் மாத்திரை சாப்பிடக்கூடாது: 3 வகையான பன்றிக் காய்ச்சல்

தற்போது உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான பரிசோதனைகள், தரவேண்டிய சிகிச்சைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* முதல் வகை பன்றிக்காய்ச்சலில், நோயாளிகளுக்கு சாதாரண காய்ச்சலுடன் கூடிய இருமல் மற்றும் தொண்டைவலி காணப்படும். இவர்களுக்கு உடம்பு வலி, தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

* இந்த நோயாளிகளுக்கு டாமிபுளு மருந்து தேவையில்லை. 2 நாட்களுக்கு தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியம்.

* எச்-1 என்-1 ஆய்வக பரிசோதனை தேவையில்லை.

* இந்நோயாளிகள் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். மற்ற நபர்களுடன் தொடர்பினை குறைத்து கொள்ள வேண்டும்.

* இருமல், தும்மல் இருந்தால் கைக்குட்டைகளை பயன்படுத்திட வேண்டும். பயணங்களை தவிர்ப்பது நல்லது.

2-வது வகை நோயாளிகளுக்கு வகை ஒன்றில் காணப்படும் நோய் அறிகுறிகளுடன் கடுமையான காய்ச்சல் மற்றும் கடுமையான தொண்டைவலி இருக்கும்.

வகை ஒன்றில் காணப்படும் நோய் அறிகுறிகளுடன் உள்ள நபர் 5 வயது வயதுக்குள் உள்ள குழந்தையாகவோ, கர்ப்பிணியாகவோ, 65 வயதிற்கு மேல் உள்ள முதியவராகவோ அல்லது நுரையீரல், இருதயம், கல்லீரல், சிறுநீரகம், நீரழிவு, நரம்பு, ரத்தம் மற்றும் எய்ட்ஸ் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, டாமிபுளு மருந்து கொடுக்கப்பட வேண்டும். ஆய்வகப்பரிசோதனை தேவையில்லை.

* வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

3-வது வகை நோயாளிகளுக்கு வகை 1 மற்றும் வகை 2-க்கான அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மயக்கம், குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்துடன் கலந்த சளி, நீல நிறமாகும் நகங்கள், குழந்தைகளை பொறுத்தவரை உணவு அருந்ததாத நிலை ஆகிய சூழ்நிலை ஏற்படும்.

* எச் 1 என் 1 ஆய்வகப்பரிசோதனைக்கு உட்படுத்திட வேண்டும்.

* மருத்துவமனையில் உள்நோயாளியாக அனு மதிக்கப்பட வேண்டும்.

* டாமிபுளு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.

* எனவே சாதாரண ஜலதோஷம் உள்ளவர்கள் அனைவரும் எச் 1 என் 1 ஆய்வு செய்திட வேண்டிய அவசியம் இல்லை.

* மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

* தேவையற்ற நிலையில் டாமிபுளு மாத்திரைகளை பயன்படுத்தாமல் இருத்தல் நல்லது.