Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சி பகுதியில் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு ஒரு லட்சம் நோட்டீஸ் விநியோகம்

Print PDF

தினகரன் 08.10.2010

கோவை மாநகராட்சி பகுதியில் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு ஒரு லட்சம் நோட்டீஸ் விநியோகம்

கோவை, அக். 8: பொதுமக்களிடம் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு லட்சம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட இருப்பதாக மாநகராட்சி மேயர், கமிஷ னர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் பன்றிக்காய்ச்சல் தடுப்பது குறித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சல் பரவும் முறை, தடுப்பு முறை குறி த்து ஒரு லட்சம் நோட்டீஸ் மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்டது. இதனை பொதுமக்களிடம் சேர்க்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் வெங்கடாசலம், கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் கார்த்திக், சுகாதாரக்குழு தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநி யோகத்தை நேற்று துவக்கி வைத்தனர்.

இதுகுறித்து மேயர் வெங்கடாசலம், கமிஷனர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் தெரிவித்ததாவது:

கோவையில் பன்றிக்காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் உடனடி சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிப்புள்ளோருக்கு டேமி ப்ளூஎன்ற மாத்திரை இலவசமாக வழங்கப்படுகிறது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகரம் முழுவதிலும் நோட்டீஸ் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோட்டீஸ் விநியோகிக்கப்படும். மேலும் 72 வார்டுகளிலும் கவுன்சிலர்கள் மூலம் இந்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பன்றிக்காய்ச்சல் குறித்து தெளிவான விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.