Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நகராட்சி தீவிர நடவடிக்கை

Print PDF

தினமணி 08.10.2010

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நகராட்சி தீவிர நடவடிக்கை

கம்பம்,​​ அக்.​ 7:​ தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் பராவாமல் தடுப்பதற்காக தெருக்களின் கழிவு நீர் ஓடைகளில் கொசு மருந்து அடிக்கும் பணி நகராட்சியின் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.​ ​

​ ​ ​ ​ ​ உத்தமபாளையம் அருகே கோம்பை பேரூராட்சி பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து,​​ மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் நகராட்சிப் பகுதியில் சுகாதாரத் துறையினர் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.​ நகராட்சியின் சார்பில் அனைத்து வார்டுகளிலும்,​​ கழிவுநீர் ஓடைகளில் கொசு மருந்து அடிக்கும் பணியில் கூடலூர் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

​ ​ ​ ​ கொசு மருந்து அடிக்கும் பணியினை நகராட்சி தலைவர் ஜெயசுதாசெல்வேந்திரன்,​​ ஆணையர் சுந்தரம்,​​ நகராட்சி சுகாதர மேற்பார்வையாளர் சரவணன்,​​ சுகாதார ஆய்வாளர்கள் குமார்,​​ தினேஷ் ஆகியோர் நேரில் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

​ ​ ​ டெங்கு போன்ற தொற்று நோய்கள் பராவாமல் இருக்க தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்கவும்,​​ தண்ணீரைக் காய்ச்சி குடிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருவதாக நகராட்சித் தலைவர் ஜெயசுதா செல்வேந்திரன் தெரிவித்தார்.​​​