Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ​ சோதனை

Print PDF

தினமணி 08.10.2010

மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ​ சோதனை

கோவை,அக்.​ 7: தரமற்ற தண்ணீரை நிரப்புவதாக வந்த புகாரை அடுத்து,​​ ​ மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

கோவை டாடாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனத்தில்,​​ தரமற்ற தண்ணீரை நிரப்புவதாக பொது மக்களிடம் இருந்து மாநகராட்சி ​ நிர்வாகத்திற்கு புகார் வந்தது.​ இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில்,​​ அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் வியாழக்கிழமை சோதனையிட்டனர்.​ சுத்திகரிப்பு இயந்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.​ தண்ணீர் பாட்டில்கள் மற்றும் கேன்களில் லேபிள்கள் முறையாக ஒட்டப்படாதது கண்டறியப்பட்டது.​ குடிநீரில் சுகாதாரக் குறைபாடு உள்ளதா என அறிய,​​ தண்ணீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ​ ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தண்ணீரின் தரத்தில் குறைபாடு இருப்பது உறுதியானால் மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என,​​ மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா ​ தெரிவித்தார்.