Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்க திட்டம்

Print PDF

தினமணி 08.10.2010

பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்க திட்டம்

கோவை,​​ அக்.7: கோவை மாநகராட்சி முழுவதும் ஒரு லட்சம் பன்றிக்காய்ச்சல் ​ விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு பன்றிக்காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

​ ​பன்றிக்காய்ச்சல் ​ பரவும் விதம்,​​ தடுப்பு முறைகள்,​​ நவீன சிகிச்சை ​ முறைகள்,​​ தடுப்பு ஊசி மற்றும் மருந்து உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் தயார் செய்யப்பட்டது.​ துண்டுப் பிரசுர விநியோக துவக்க நிகழ்ச்சி,​​ மாநகராட்சி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.​ மாநகராட்சி மேயர் ஆர்.​ வெங்கடாசலம் இதனை துவக்கி வைத்தார்.​

ஆணையர் அன்சுல் மிஸ்ரா,​​ சுகாதாரக் குழுத்தலைவர் நாச்சிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.​ மாலை வரை 10 ஆயிரம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.​

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 28 ஆயிரம் மாணவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் இந்த பிரசுரங்களை விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக,​​ மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் அருணா தெரிவித்தார்.