Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேலப்பாளையத்தில் குப்பை, இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

Print PDF

தினகரன்   13.10.2010

மேலப்பாளையத்தில் குப்பை, இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

நெல்லை, அக்.13: மேலப்பாளையத்தில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுபுற சுகா தாரம் பாதிப்பு ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாநகராட்சி நிர்வாக வசதிக்காக நெல் லை, தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளின் கழிவுகள், கழிவுநீர் ஓடையிலிருந்து அள்ளப்படும் குப்பைகள், இறைச்சிகடைகளின் கழிவுகள் ஆகியவற் றை மண்டல பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களில் கொட்டப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதில் நெல்லை மண்டல பகுதியில் அள்ளப்படும் குப்பைகளை பேட்டை சுத்தமல்லி பம்பிங் ஸ்டேஷன் அருகிலும், பாளை மண்டலத்தில் அள்ளப்படும் குப்பைகளை கேடிசிநகர் அருகே உள்ள கிருபாநகர் பகுதியிலும், மேலப்பாளையம் மண்டலத்தில் அள்ளப்படும் குப்பைகள் மாநகராட்சி ஆடறுப்பு மனை அருகே நாங்குனேரி சாலை பகுதியிலும் கொட்டப்பட்டுவருகிறது. ராமையன்பட்டி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபட்டது. இதனால் ராமையன்பட்டி கிராம மக்கள் குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகையால் தற்போது கிருபாநகர், பேட்டை சுத்தமல்லி, மேலப்பாளையம் பகுதியில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. மேலப்பாளையத்தில் ஆடு, மாடு, கோழி மற்றும் தெருவுக்கு ஒரு மீன்கடை என இறைச்சிகடைகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன.

இதில் கோழி இறைச்சிக்கடைகள் துவங்குவதற்கு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில் புற்றீசல் போல மேலப்பாளையம் முழுவதும் கோழி கடைகளின் ஆதிக்கம் உள் ளது. ஆடு மற்றும் மாட்டிறைச்சி கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு களை விட கோழி இறைச்சி கடைகளிலிருந்து வெளி யாகும் கழிவுகள் அதிகமாகும்.

இங்குள்ள தெருக்களிலிருந்து கொண்டுவரப்படும் குப்பைகள், இறைச்சி கழிவு கள் நாங்குனேரி சாலை பகுதி யில் கொட்டப்படுகிறது. இதனால் நெல்லை நகர், அமுதா நகர், சுவிசேஷ நகர், பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதி பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தற் போது மழை பெய்துள்ள தால் இறைச்சி கழிவுகளிலிருந்து வெளியாகும் துர்நாற்றம் அதிகரித்து பொது மக்கள் வீடுகளில் இருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்க ளை பயமுறுத்தி வரும் பன்றி காய்ச்சல் நோய் கோழி கழிவுகளிலிருந்து பரவுவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றன. ஆகையால் அதிகளவில் கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மேலும் இங்கு கொட்டப்படும் குப்பைகளில் முக் கிய பங்குவகிப்பது பிளாஸ் டிக் பைகள். இந்த பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுப்புற சுகா தாரம் பாதிக்கிறது. நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பிளாஸ் டிக் பொருட்களுக்கு கட் டாய தடைவிதிக்க வேண் டும்.

நகர்புறத்தில் புற்றீசல் போல் தோன்றும் மீன்கடை கள், இறைச்சிகடைகள் மீது மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகர பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை மக்கும் மக்காத குப்பையாக தரம்பிரித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகை யில் குப்பைகளை அழிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்பதே சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலபாளையம் சந்தை அருகே உள்ள நாங்குனேரி சாலை பகுதியில் மலைபோல் குப்பை கொட்டப்பட்டுள்ளது.