Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொசுக்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்க: மாநகராட்சி கமிஷனர் அறிவுரை

Print PDF

தினமலர் 13.10.2010

கொசுக்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்க: மாநகராட்சி கமிஷனர் அறிவுரை

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில் கொசுக்கள் மூலம் நோய்கள் பரவுவதை தடுக்க, மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி பல்வேறு அறிவுரைகள் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: *மழை நீர் மற்றும் குடிநீரில் உற்பத்தியாகி பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. *வீட்டில் உள்ள மழை நீர் தேங்ககூடிய பயன்படுத்தாத உரல், தேங்காய் மூடி, டயர், பெயின்ட் டப்பாக்கள், பூந்தொட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். *வீட்டில் குடிநீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். *தண்ணீரில் உள்ள புழுக்கள் சிறிது நாட்களில் கொசுவாக மாறிவிடும். எனவே, தண்ணீர் சேகரிக்கும் தொட்டிகளில் சிறிய புழுக்கள் இருந்தால், நீரை துணியால் வடிகட்ட வேண்டும். *பயன்படுத்தாத கிணறுகள் மற்றும் நீர்த்தொட்டிகளில் கம்பூசியா வகை மீன்களை வளர்ப்பதால் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தலாம். இதற்கு மாநகராட்சி மலேரியா பிரிவை அணுகவும். *செப்டிங் டேங்க் காற்று போக்கியில் கொசுவலையை கட்டி வைக்கவும். செப்டிங் டேங்கை ஓட்டை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். *குளிர் காய்ச்சல் மற்றும் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.