Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டாஸ்மாக் கடை பார்களில் சுகாதாரமற்ற குடிநீர் பாக்கெட் அழிப்பு

Print PDF

தினகரன் 14.10.2010

டாஸ்மாக் கடை பார்களில் சுகாதாரமற்ற குடிநீர் பாக்கெட் அழிப்பு

திருத்தணி, அக். 14: திருத்தணி பகுதி டாஸ்மாக் கடை பார் மற்றும் குளிர்பான கடைகளில் சுற்றுப்புற சுகாதாரம் பாதுகாக்கப்படுவது இல்லை என்று திருவள்ளூர் கலெக்டர் ராஜேஷுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

அவரது உத்தரவின்படி, மாவட்ட துணை சுகாதார இயக்குனர் சம்பத் மேற்பார்வையில் திருத்தணி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சாமுவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சம்பத் மற்றும் சுகாதார அதிகாரிகள் டாஸ்மாக் பார் மற்றும் குளிர்பான கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, திருத்தணி சன்னதி தெரு, அரக்கோணம் சாலை, சென்னை பைபாஸ் சாலை, சித்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை பார்களில், போதிய சுகாதாரம் மற்றும் கழிப்பிட வசதி இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை உடனே சீர் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் டாஸ்மாக் பார் மற்றும் குளிர்பான கடைகளில் இருந்த சுகாதாரமற்ற குடிநீர் பாட்டில் மற்றும் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.