Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வால்பாறையில் பாதுகாப்பற்ற குடிநீர் வினியோகத்தால் நோய் பரவும் ஆபத்து

Print PDF

தினகரன் 14.10.2010

வால்பாறையில் பாதுகாப்பற்ற குடிநீர் வினியோகத்தால் நோய் பரவும் ஆபத்து

வால்பாறை, அக்.14: வால்பாறைக்கு குடிநீர் ஆதாரமாக அக்காமலை விளங்குகிறது. இங்கிருந்து முதல் குடிநீர்த்திட்டம் 1984ல் துவக்கப்பட்டு புவிஈர்ப்பு சக்தி மூலம் (மின்மோட்டர் இல்லாமல்) மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எதிர்கால மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2007ம் ஆண்டு புதிதாக வால்பாறை 2ம் குடிநீர்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூ2.5 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசு அனுமதி பெற்று தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் வால்பாறை வந்தபோது இத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

2008ம் ஆண்டு ஜனவரி மாதம் இத்திட்டப்பணிகள் துவங்கியது. முதலாம் திட்டத்தில் உள்ள குழாய்களுக்கு அருகிலேயே சுமார் 8 கி.மீட்டர் நீளத்துக்கு புதிய இரும்பு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. 2008 டிசம்பர் மாதம் பணிகள் நிறைவடைந்து, 2009 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 1 வருட குடிநீர்வாரிய ஒப்பந்ததாரரால் இயக்கப்பட்டு வந்தது.

பணிகள் சரியாக நடைபெறவில்லை என நகாராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர் புகார்கள் கூறிவந்ததால், ஓராண்டு பராமரிப்பு பணிகள் முடிந்தும் நகராட்சி நிர்வாகம் புதிய திட்டத்தை ஏற்கவில்லை.

இந்நிலையில் குடிநீர் குழாய்களில் அடிக் கடி பழுதுகள் ஏற்படுவதால் புதிய திட்ட பணிகளால் பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் குடிநீர் சுத்திகரிப்பிற்காக வால்பாறை கோ&ஆப். காலனியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள இயந்திரம் கடந்த 10 மாத காலமாக பழுதடைந்துள்ளது. மெஷின் பழுது ஆனதால் வால்பாறையில் வினியோகிக்கப்படும் 8 லட்சம் லிட்டர் குடிநீரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. வால்பாறையில் சுமார் 1500 குடிநீர் இணைப்புகள் உள்ளது. புதிய குடிநீர்திட்டம் செயல்படுத்தப்பட்டும், வால்பாறை மக்கள் பாதுகாப்பற்ற குடிநீரையே பருகவேண்டிய நிலை உள்ளது.

புதிய குழாய் பழுதால் கடந்த மூன்று நாட்களாகவே முதல் குடிநீர்திட்ட குழாய் கள் மூலமாகவே அக்காமலை தடுப்பு அணையிலிருந்து வால்பாறைக்கு குடிநீர் வருகிறது. இரண்டாம் குடிநீர்திட்ட பணிகள் முழுமையடையாமல் இருப்பதால், வால்பாறை மக்களின் நலன்கருதி நகராட்சி நிர்வாகமே பழுது உள்ளிட்ட பணிகளை செய்கிறது. இதனால் வால்பாறை நகராட்சிக்கு 2010 ஜனவரிமாதம் முதல் இதுவரை ரூ.20 லட்சம் விரையம் ஏற்பட்டுள்தாக நகராட்சி அலுலவலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓப்பந்ததாரரை அழைத்து முறை யாக பணிகளை முடிக்க உத்திரவிடவேண்டும் என்று வால்பாறை நகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர். மேலும் இத்திட்டத்தை தற்போது செயல்படுத்துவது குடிநீர்வாரியமா அல்லது வால்பாறை நகராட்சியா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ள னர்.

இந்நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வால்பாறை பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Thursday, 14 October 2010 06:02