Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் ரூ.5 லட்சத்தில் இலவச நவீன கழிப்பிடம்

Print PDF

தினமலர் 21.10.2010

பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் ரூ.5 லட்சத்தில் இலவச நவீன கழிப்பிடம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் ஐந்து லட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் இலவச நவீன கழிப்பிடம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்த இலவச கழிப்பிடம் பாழடைந்து கிடந்தது. கழிப்பிடத்தில் இருந்து வெளியேற்றும் கழிவு நீர் சாக்கடையில் வெளியேற வழியின்றி தேங்கியது. இதனால் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் துர்நாற்றம் பரவி சுகாதாரம் பாதித்தது. அதனால், பழைய பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்தை புதுப்பிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். பழைய கழிப்பிடத்தை அகற்றி அங்கு கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

நகராட்சி பொறியாளர் மோகன் கூறியதாவது: பழைய பஸ் ஸ்டாண்டில் ரோடு சீர்குலைந்துள்ளதால், அதை புதுப்பிக்க திட்டமிடப் பட்டது. சர்வே செய்யும் பணிகள் நிறைவடைந்து ஒரு கோடி ரூபாயில் புதிதாக கான்கிரீட் ஓடுதளம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் இருக்கை, பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை போன்றவை சீரமைக்கப்பட்டு வருகிறது. இலவச கழிப்பிடம், சாக்கடை போன்றவற்றை சீரமைத்து, சாக்கடை மீது நடைபாதை அமைக்க ஐந்து லட்சம் ரூபாயில் திட்டமிடப்பட்டுள்ளது. கழிப்பிட கட்டுமான பணிகள் முடிந்ததும் நடைபாதை அமைக்கும் பணி துவங்கப்படும் என்றார்.