Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கும்மிடிப்பூண்டியில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை

Print PDF

தினமணி 21.10.2010

கும்மிடிப்பூண்டியில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை

கும்மிடிப்பூண்டி, அக். 20: கும்மிடிப்பூண்டி பகுதிகளில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

÷கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் அதிகரித்துள்ள கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி தலைவர் கே.என். பாஸ்கர், செயல் அலுவலர் ஜெயக்குமாரிடம் கவுன்சிலர்கள் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து கொசுக்களை ஒழிக்க 3 பணியாளர்கள் பேரூராட்சியின் சார்பாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

÷இவர்கள் கழிவுநீர் கால்வாய்கள், சாலையோரங்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்து வருகின்றனர். மேலும், குப்பை கூளங்கள் சேராதவாறு தினமும் அகற்ற பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

÷கொசுத் தொல்லை இருந்தால் அது குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.