Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வருமுன் காப்போம் முகாம்களில் 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

Print PDF

தினமணி                     01.11.2010

வருமுன் காப்போம் முகாம்களில் 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

கோவை,அக். 31: கோவை மாநகராட்சியில் நடைபெற்ற வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்கள் மூலம் 25,072 பேர் பயனடைந்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் மாதந்தோறும் 3வது சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி 24 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலம் 25,072 பேர் பயனடைந்துள்ளனர். இதில் 2319 கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, 1665 நோயாளிகளுக்கு இ.சி.ஜி மூலம் இருதயப் பரிசோதனை, 18,311 பேருக்கு ரத்தப் பரிசோதனை, 5033 நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை கண்டறியும் பரிசோதனை, 8640 பேருக்கு சிறுநீரில் உப்பு பரிசோதனை செய்யப்பட்டது. முகாம்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 789 மதிப்புக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன என்றார் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா.