Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.13 கோடி செலவில் தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரி நவீனமாகிறது

Print PDF

மாலை மலர் 24.08.2009

ரூ.13 கோடி செலவில் தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரி நவீனமாகிறது: மு..ஸ்டாலின் 27-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார்

தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரி ரூ.13 கோடி செலவில் நவீனப்படுத்தப்படுகிறது. 27-ந் தேதி துணை முதல்- அமைச்சர் மு..ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

இதுபற்றி மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தண்டையார்பேட்டை தொற்று நோய் ஆஸ்பத்திரியில் தற்போது 100 படுக்கைகள் உள்ளது. இந்த ஆஸ்பத்திரி விரிவாக்கம் செய்து நவீனப்படுத்தப்பட உள்ளது. ரூ.13.53 கோடி செலவில் புதியகட்டிடங்கள் கட்டப்படுகிறது.

இதற்கான விழா தண்டையார் பேட்டை ஆஸ்பத்திரி முன்பு 27-ந் தேதி மாலையில் நடக்கிறது. துணைமுதல்- அமைச்சர் மு..ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

அதே நிகழ்ச்சியில் வடசென்னையில் ரூ.12 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள், சத்துணவு கூடங்கள் உள்பட 80 புதிய கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.

இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.