Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகரில் பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் ஸ்பாட் பைன் புதிய விதி விரைவில் அமல்

Print PDF

தினகரன்               11.11.2010

மாநகரில் பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் ஸ்பாட் பைன் புதிய விதி விரைவில் அமல்

கோவை, நவ. 11: கோவை மாநகராட்சியில் சுகாதார பணிகளுக்கு புதிய துணை விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஸ்பாட் பைன் விதிக்கப்படும்.

கோவை மாநகராட்சியில், 96.50 கோடி ரூபாய் மதிப்பி லான திடக்கழிவு மேலாண் மை பணி ஏறக்குறைய நிறைவடையும் நிலையில் இருக்கிறது. இந்த பணிகளை சிறப் பாக செயல்படுத்த, புதிய துணை விதிகளை மாநகரா ட்சி சட்டம் 1981ன் படி, நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவை மாநகராட்சியில் மட்டும், விதிமுறை மீறல் தொடர்பாக 24 இனங்களுக்கு அபராதம் விதிக்க, துணை விதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் அரசின் அனுமதி பெற்றவுடன் செயல்படுத்தப்படும். பொது இடத்தில் எச்சில் துப்புதல், சிறுநீர், மலம் கழித் தல், குளித்தல் போன்றவற்றி க்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஓட்டல், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் திறந்த வெளியில் உணவு கழிவுகளை கொட்டி னால் 100 ரூபாய் முதல் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சாக்கடையில் எந்த கழிவுகளையும் கொட்ட அனுமதி கிடையாது. கழிவு நீரையும் திறந்த வெளியில் விடக்கூடாது.

இறைச்சி கழிவுகளை கண்ட இடத்தில் கொட்டினாலும் 500 ரூபாய் வரை உடனடி அபராதம் விதிக்கப்படும். பொது இடத்தில் இரு சக்கர வாகனத்தை கழுவி னால் 100 ரூபாயும், கார், ஆட் டோ, ஜீப் போன்றவற்றை கழுவினால் 250 ரூபாய் வரை யிலும், சரக்கு லாரிகளை கழுவினால் ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். கட்டுமான, கட்டட இடிபாடு கழிவுகளை பொது இடம், குளக்கரை, மக்கள் நடமாட் டம் மிகுந்த இடம், பூங்கா, காலியிடங்களில் கொட்டி னால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க துணை விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உயிரி மருத்துவ கழிவுகளை பொது இடத்தில் கொட்டினாலும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்.

வேதி பொருள் கழிவு, சாக்லெட், காலாவதியான உணவு பொருள் கழிவுகளை பொது இடத்தில் கொட்டி னால் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில், கோவை மாநகர் பகுதிக்கு இதுவரை 4.58 லட்சம் இலவச குப்பை கூடை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதே அளவிற்கு குப்பை கூடை இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இந்த பணி முடிந்ததும், வீடு, வீடாக குப்பை சேகரிக்கப்படும். மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி கொடுத்த குப் பை கூடையில் கொட்டி ஒப்படைக்கவேண்டும்.

மாறாக குப்பைகளை தரம் பிரிக்காமல் கொட்டி னால் கூட, 250 ரூபாய் அபராதம் விதிக்கவும் துணை விதி திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. நடைபாதை கடை முறைப்படுத்துதல், கழிப்பிடங்களை சீரமைத்தல், குப்பை சேகரித்தல் மூலம் கோவையை முழு சுகாதார நகரமாக திட்டம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

24 இனங்களுக்கு அதிரடி ஸ்பாட் பைன் திட்டம், தமிழகத்தில் வேறு எந்த மாநகராட்சியிலும் கிடையாது. மும்பை மாநகராட்சியில், இதுபோன்ற ஸ்பாட் பைன் திட்டம் நடைமுறையில் இருப்பது குறிப்பிடதக்கது.