Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவில்பட்டி, புதூரில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினகரன்               29.11.2010

கோவில்பட்டி, புதூரில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்

கோவில்பட்டி, நவ. 29: கோவில்பட்டி, புதூரில் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கலெக்டர் மகேஸ்வரன் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் சுகாதார அலுவலர்கள் கடந்த ஒரு மாதமாக ஆய்வு செய்து வருகின்றனர். நகராட்சி கமிஷனர் விஜயராகவன் உத்தரவின்படி கோவில்பட்டி பாரதிதாசன் தெருவில் உள்ள கடையில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது உணவு மாதிரியாக ரவை பாக்கெட் எடுக்கப்பட்டு மதுரையில் உள்ள அரசு பகுப்பாய்விற்கு நகராட்சி உணவு ஆய்வாளர்கள் முத்துகுமார், வெங்கடேஷ் ஆகி யோர் அனுப்பி வைத் தனர்.

மேலும் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான சாக்லெட், போன்விட்டா, குளுக்கோஸ் பாக்கெட்டு களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். காலாவதியான உணவு பொருட் களை விற்பனை நிலையங்களில் வைக்கக்கூடாது என்றும், இவைகளை கடை உரிமையாளர்கள் உடனுக்குடன் அழிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் நகராட்சி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நக ராட்சி கமிஷனர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

புதூர்: புதூர் ஒன்றிய பகுதியில் உணவு ஆய்வாளர் ஜெய்சங்கர், கயத்தார் மற்றும் கழுகுமலை பேரூ ராட்சி உணவு ஆய்வாளர் பொன்னுராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் உணவு விடுதிகள், டீக்கடைகள், பலசரக்கு கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

ரூ.2050 மதிப்பிலான காலாவதியான டீத்தூள், அயோடின் கலக்காத உப்பு, தூதுவளை, துளசி, கொய்யா, சைனா மிட்டாய், பிஸ்கெட், கான்பப்ஸ், பச்சை பட்டாணி, அரிசி மாவு, தடை செய்யப்பட்ட சாயங்கள், மைதா, சாயம் கலந்த அப்பளம், காரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் உணவு விடுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்கவும், சமையல் அறை, உணவு மூலப்பொருள் இருப்பு அறை, கைகழுவுமிடங்களை சுத்தமாக வைத்திருக்க அறிவுரை வழங்கினர். புதூர் பகுதி கடைகளில் சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.