Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு & தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்படும் குப்பை அள்ளும் திட்ட ஒப்பந்தம் இணையத்தில் வெளியிட வேண்டும்

Print PDF

தினகரன்             01.12.2010

அரசு & தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்படும் குப்பை அள்ளும் திட்ட ஒப்பந்தம் இணையத்தில் வெளியிட வேண்டும்

புதுடெல்லி, டிச.1: அரசு & தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்படும் வீடுகளில் குப்பை சேகரிக்கும் திட்டம் குறித்த ஒப்பந்த விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று மாநகராட்சிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர் ராகேஷ் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாநகராட்சியிடம் மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில், அரசு & தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்படும், வீடுகளில் குப்பை சேகரிக்கும் திட்டம் குறித்து மக்களிடம் தெரிவிக்கப்படவில்லை. இத்திட்டத்தில் அரசுடன் இணைந்து செயல்படும் தனியார் நிறுவனம் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதேபோல், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எந்த அங்கீகார சான்றும் தரப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில், குப்பை அள்ளும் திட்டத்தை நடத்துவதாக கூறி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், குடியிருப்பாளர்கள் நலச்சங்கத்திடம் வந்து குப்பை தொட்டிகளை தங்கள் பொறுப்பில் கொடுக்கும்படி கேட்டுகின்றனர். இதனால் குப்பை சேகரிக்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள், அதற்கு அளிக் கப்பட்டுள்ள சான்று விவரம் ஆகியவற்றை பற்றிய தகவல் தர வேண்டும் என்று கூறியிருந்தார். மாநகராட்சி சார்பில் இதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அவர் தலைமை தகவல் ஆணையரிடம் இந்த விவரங்களை தரக்கேட்டு விண்ணப்பித்தார். தலைமை ஆணையர் சைலேஷ் காந்தி இந்த மனுவை விசாரணை செய்தார்.

இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட உத்தவு:

மாநகராட்சி கமிஷனர் உடனடியாக, அரசு & தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்படும் குப்பை சேகரிக்கும் திட்ட ஒப்பந்தம் விவரத்தை தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதை வரும் 20ம் தேதிக்குள் செய்ய வேண்டும். இந்த விவரம் இருந்தால்தான் பொதுமக்கள் தங்களிடம் வரும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் உண்மையானவர்கள்தானா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் விவரத்தையும் மாநகராட்சி கமிஷனர் வரும் 20ம் தேதிக்குள் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு சைலேஷ் காந்தி உத்தரவிட்டார்.