Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதார சீர்கேடுகள் காரணமாக சமாதானபுரத்தில் ஓட்டல் மூடல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினகரன்               02.12.2010

சுகாதார சீர்கேடுகள் காரணமாக சமாதானபுரத்தில் ஓட்டல் மூடல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

நெல்லை, டிச. 2: சுகாதார சீர்கேடுகள் காரணமாக சமாதானபுரத்தில் நேற்று ஒரு ஓட்டலை மாநகராட்சி அதிகாரிகள் மூடினர். மழைக்காலங்களில் நெல்லை மாநகராட்சி ஓட்டல்களில் சுகாதாரம் பேணப்படுவதில்லை. சில ஓட்டல்களில் சமையலறை கள் கழிவுநீர் நிறைந்து ஈக் களின் கூடாரமாக உள்ள தாக மாநகராட்சி கமிஷனர் சுப்பையனுக்கு புகார்கள் சென்றன. இதன்பேரில் சுகாதார துறை அதிகாரிகள் ஓட்டல்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை துண்டு பிர சுரங்களாக அளித்தனர்.

சில ஓட்டல்கள் அதை யும் மீறி அசுத்தமாக காட்சியளியளித்து வருகின்றன. இதை கண்காணிக்க உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் சாகுல்ஹமீது, அரசகுமார், முருகன், பெருமாள், பாலு, துப்புரவு மேற்பார்வையாளர்கள் சுப்பிரமணியன், பேச்சிபாண்டி, மணிகண்டன், செல்லப்பா, பாலு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. நேற்று இக்குழுவினர் பாளையிலுள்ள 6 ஓட்டல்களில் சோதனை நடத்தினர்.

இதில் சமாதானபுரத் தில் உள்ள ஒரு ஓட்டல் சமையலறை அசுத்தமாக காட்சியளித்தது. உடனடியாக அதை அதிகாரிகள் இழுத்து மூடினர். அங்குள்ள குறைபாடுகளை அறிக்கை யாக தயாரித்து ஓட்டல் ஊழியர்களிடம் அளித்தனர். 3 தினங்கள் தொழில் நடத்த தடை விதித்ததோடு, குறைகளை சரி செய்தபிறகே கடையை திறக்க வேண்டு மென உத்தரவிட்டனர்.

தொடர்ந்து மனகாவலம்பிள்ளை பூங்கா அருகேயுள்ள ஓட்டலில் பாஸ்ட்புட் உணவில் கலக்க வைக்கப்பட்டிருந்த அஜினமோட்டா பாக்கெட்டுகளை அதிகாரிகள் அழித்தனர். ‘மாநகராட்சி விதிமுறைகளை பின்பற்றி ஓட்டல்கள் சூடான வெந்நீரை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதோடு, சுத்தம் பேணவும் முன்வரவேண்டும். அதை மீறும் பட்சத்தில் ஓட்டல்கள் சீல் வைக்கப்படும்என அதிகாரிகள் குழு எச்சரித்துள்ளது. பாளையில் உள்ள ஹோட்டல்களில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.