Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தினகரன் செய்தி எதிரொலி பழைய டயர்களில் தேங்கிய மழைநீர் அகற்றம்

Print PDF

தினகரன்             14.12.2010

தினகரன் செய்தி எதிரொலி பழைய டயர்களில் தேங்கிய மழைநீர் அகற்றம்

நெல்லை, டிச.14: தினகரன் செய்தி எதிரொலியாக பழைய டயர்களில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அகற்றினர்.

நெல்லை மாநகராட்சியில் மழைக்காலங்களில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. ஆட்டுஉரல், தேங்காய் சிரட்டை, பழைய டயர்களில் தேங்கும் மழைநீர் மூலம் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. நெல்லை சந்திப்பு கைலாசபுரம் பகுதியில் வீதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள பழைய டயர்களில் மழை நீர் தேங்கி கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளி யானது.

இதை தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழைய டயர்களில் மழை நீரை அகற்றும் பணியை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக மாநகராட்சி மைய அலு வலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பழைய டயர்களில் தேங்கிய மழைநீரை உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம், சுகாதார ஆய் வாளர் அரசகுமார் தலைமையில் சுகாதாரத் துறை ஊழியர்கள் அகற்றி னர்.

மழைநீர் தேங்கும் வகையில் பழைய டயர் களை தெருவில் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தினகரன் செய்தி எதிரொலியால் டயர்களில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.