Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை திட்டத்திற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

Print PDF

தினகரன்       23.12.2010

பாதாள சாக்கடை திட்டத்திற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

சின்னமனூர், டிச. 23:

சின்னமனூர் மயானத்தில், பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக ரூ.4.87 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சின்னமனூர் நகராட்சி தலைவர் தமிழ்செல்வி பொறுப்பு ஏற்றது முதல், பாதாள சாக்கடை அமைக் கும் பணியில் தீவிரம் காட்டினார். அதன்பயனாக ரூ.10.16 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. முதல் வார்டு மட்டும் ஊருக்கு வெளியே இருப்பதால் மற்ற 26 வார்டுகளில் இத்திட்ட பணிகள் துவங்கி குழாய்கள், ஆள் நுழைவு தொட்டிகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன.தற்போது குழாய்களிலிருந்து வெளியேறுகின்ற கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் பொருட்டு, சுத்திகரிப்பு நிலையம் ரூ.4.87 கோடியில் அமைக்கப்படுகிறது. ராதா கிருஷ்ணன் ரைஸ்மில் தெரு மயான வளாகத்தில் இதற்கான கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சுத்திகரிப்பு நிலை யம் அதிநவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்படுகிறது. இப்பணியை சென்னை நகராட்சிகள் நிர்வாக கூடுதல் இயக்குனர் பிச்சை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திட் டம் 2011ம் ஆண்டு இறுதிக் குள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என நக ராட்சி தலைவர் தெரிவித்தார்.

சின்னமனூரில் நடைபெற்று வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை நகராட்சிகளின் கூடுதல் இயக்குனர் பிச்சை பார்வையிட்டார்.