Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உரிமம் பெறாத பால்வியாபாரிகளுக்கு கராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

Print PDF

தினகரன்       13.01.2011

உரிமம் பெறாத பால்வியாபாரிகளுக்கு கராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

பொள்ளாச்சி, ஜன 13:

பொள் ளாச்சி நகரில் சைக்கிள், மொபட் ஆகிய வாகனங்களில் உரிமம் பெறாமல் பால் வியாபாரம் செய்பவர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் பூங்கொடி அருமைக்கண் உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் நேற்று வெங்கட்ரமணன் ரோடு, மார்க்கெட் ரோடு சந்திப்பு பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் அவ்வழியாக சைக்கிள் மற்றும் மொபட்களில் வந்த பால் வியாபாரிகளை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிடிபட்டவர்களில் எவரும் பால் விற்பனைக்கான உரிமம் பெற வில்லை என்பது தெரியவந்தது. அடுத்த மாத இறுதிக்குள் பால் வியாபாரிகள் நகராட்சியில் கட்டணத்தை செலுத்தி உரிமம் பெற வேண்டும் என்று அதிகாரி கள் எச்சரிக்கை செய்தனர்.

இதுகுறித்து நகர்நல அலுவலர் குணசேகரன் கூறியதாவது, நகராட்சி எல்லைக்குள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் சைக்கிள் மற் றும் மொபட்களில் கேன் களை கட்டி பால் விற்பனை செய்து வருகின்றனர். எந்த உணவு பொருளை விற்பனை செய்வதாக இருந்தாலும் நகராட்சியில் அதற்கான கட்டணத்தை செலுத்தி உரிமம் பெற வேண்டும். அவ்வாறு உரிமம் பெற விண்ணப்பிக்கும்போது வியாபாரி எந்த முகவரியில் வசிக்கிறார்?. அவர் விற்கும் பொருள் எங்கு, எவரிடம் வாங்கப்படுகிறது என்ற அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படும்.

இவ்வாறு உரிமம் பெறுவதன் மூலம் உணவு பொருளில் எதாவது கலப்படம் அல்லது தீங்கு ஏற்படும்போது சம்பந்தப்பட்ட வியாபாரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியும். இதுபோன்ற உரிமங்களை ஆண்டுதோறும் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். ஆனால் நகரில் கடந்த பல ஆண்டுகளாக எந்த ஒரு பால்வியாபாரியும் உரிமம் பெறவில்லை. இதனால் நகராட்சிக்கு வரு வாய் இழப்பும் ஏற்படுகிறது. சைக்கிள் மற்றும் மொபட்களில் பால் வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டு உரிமக் கட்டணமாக ரூ. 125 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்திற்குள் இந்த உரிமத்தை பெற வேண்டும். தாமதமானால் அதற்கு மிகக் குறைந்தபட்ச தொகை அபராதமாக விதிக்கப்படும்.
தற்போது நகரில் ஆங் காங்கு வாகன சோதனை நடத்தி பால்வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகும் உரிமம் பெறாமல் பால் வியாபாரம் செய்தால் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.