Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேயர் துரைசாமி பேச்சு காலரா வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்

Print PDF

தினகரன்    06.08.2012

மேயர் துரைசாமி பேச்சு காலரா வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்

ஆலந்தூர், : மாரடைப்பில் இறந்தவரை காலராவில் இறந்ததாக கூறி வதந்தி பரப்புகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம் என்று மேயர் சைதைதுரைசாமி கூறினார்.புழுதிவாக்கம் இந்து காலனி நலச்சங்க 25ம் ஆண்டு விழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவுக்கு சங்க செயலாளர் என்.மதிவதனன் தலைமைவகித்தார். பொருளாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். நிர்வாகி நாகராஜன் வரவேற்றார்.

இதில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:

உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளுங்கள். உடலை ஆரோக்கியமாக பாதுகாக்க உணவு முறையை மாற்றி கொள்ளுங்கள். ஊறுகாய்போன்ற ஊறு விளைவிக்கும் பொருட் களை தவிர்த்து விடுங்கள். நோய் வராமல் பார்த்து கொள்ளுங்கள்.இப்போது சென்னையில் காலரா இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள்.மாரடைப்பால் இறந்தவரை காலராவில் இறந்ததாக திரித்து கூறுகிறார்கள்.இதை யாரும் நம்ப வேண்டாம். எல்லா நாட்டிலும் காலரா வந்து போகும். இங்கு முறையான சிகிச்சை அளிப்பதால் நோயாளிகள் நல்லபடியாக வீடுதிரும்புகின்றனர்.

நலச்சங்கத்தினர் வைத்துள்ள கோரிக்கை களை நிறைவேற்றி தருவேன். உங்கள் குறைகளை தொலைபேசி மூலம் எனக்கு தெரியப்படுத்தினால்உடனே சரி செய்யப்படும்.இவ்வாறு சைதை துரைசாமி பேசினார்.மேடவாக்கம் பிரதான சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும், பாதாள சாக்கடை,மற்றும் குடிநீர் திட்ட பணியை விரைவில் முடிக்க வேண்டும், குழந்தைகள் முதல் முதியோர் வரை அடிக்கடி விழுந்து எழும் குண்டும் குரூயுமானசாலைகளை உடனே சீரமைக்க வேண்டும், ஆதம்பாக்கத்தில் இருந்து புழுதிவாக்கத்துக்கு தனியாக பஸ் விட வேண்டும் என்று மேயரிடம் நலச்சங்கம்சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

விழாவில்  சிட்லப்பாக்கம்   ராஜேந்திரன்  எம். பி,  கே. பி. கந்தன் எம்.எல்.ஏ,  மண்டல  குழு  தலைவர் ராஜாராம், கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன், மணிகண்டன்,நலச்சங்க நிர்வாகிகள் விக்னேஷ் பாபு, மனோகர், சவுமியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.