Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுரண்டை பேரூராட்சி பகுதியில் பன்றி வளர்த்தால் நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்     10.08.2012

சுரண்டை பேரூராட்சி பகுதியில் பன்றி வளர்த்தால் நடவடிக்கை செயல் அலுவலர் எச்சரிக்கை

சுரண்டை, : சுரண்டை பேரூராட்சி செயல் அலு வலர் சாமுவேல்துரைராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

சுரண்டை தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் முழு சுகாதார பணிகள் போர்க் கால அடிப்படையில் நடந்து வருகின்றன.  ஊருக்குள் பன்றிகளை வளர்ப்பதால் பொது சுகாதாரம் கெடு கிறது. மேலும் பன்றி காய்ச் சல் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளன. நோய்களை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக பன்றி வளர்ப்பவர்கள் மீது பொது சுகா தார சட்டப்படி காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனவே பன்றிகள் வளர்ப்பவர்கள் பேரூராட்சி பகுதியில்   இல்லாமல் காட்டுப்பகுதியில்  வளர்க்க வேண்டும். அதையும் மீறி பன்றிகளை ஊருக்குள் வளர்த்து தெருக்களில் அலையவிட்டால்  முன்னறிவிப்பின்றி பேரூராட்சி சுகா தார பணியாளர்கள் மூலம் பன்றிகளை பிடிப்பதுடன் அதற்கான செலவை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பேரூராட்சி தலைவர் ஜெயராணி வள்ளி முருகன், துணைத்தலைவர் பழனி மற்றும் கவுன்சிலர்கள் முழு ஒத்துழைப்புடன் சுகாதார பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Last Updated on Friday, 10 August 2012 11:44