Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேட்டுப்பாளையம் வட்டத்தில் இலவச காப்பீட்டு திட்டத்திற்கு 67,120 குடும்பங்கள் தேர்வு

Print PDF

ினமணி 07.09.2009

மேட்டுப்பாளையம் வட்டத்தில் இலவச காப்பீட்டு திட்டத்திற்கு 67,120 குடும்பங்கள் தேர்வு

மேட்டுப்பாளையம், செப்.5: தமிழக அரசின் உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேட்டுப்பா ளையம் வட்டத்தில் 67120 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் ஏ.சுகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகமெங்கும் சுமார் 1 கோடி குடும்பங்கள் பயனடையும்வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களின் உறுப்பினர்களும், ஆண்டுவருமானம் ரூ72000-க்கு கீழ் உள்ள குடும்பங்களும் பயன்பெறுவர்.

இதற்கான பிரீமியத்தொகை அரசு சார்பில், காப்பீட்டு நிறுவ னத்திற்கு செலுத்தப்படும்.
இதன் மூலம், உறுப்பினர்கள் 51 வகையான நோய்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமணைகளில் 4 ஆண்டுகளுக்கு, ரூ.1 லட்சம் வரையில் இலவச மருத்துவசிகிச்சை பெற லாம்.

இந்த திட்டத்தின் கீழ், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 16025, காரமடை-சிறுமுகை பேரூராட்சிகளில் 14897, 17 கிராம பஞ்சாயத்துக்களில் 30922 என மேட்டுப்பாளையம் வட்டத்தில் 67120 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நா டு விவசாயதொழிலாளர்,
விவசாய நல வாரிய உறுப்பினர்கள் உட்பட அனைத்து நலவாரியங்களில் உறுப்பினராக உள்ளவர்கள் தங்கள் வாரிய உறுப்பினர் அடையாள அட்டை, குடும்ப அட்டையுட னும், ரூ. 72000-க்கு கீழ் வருமானம் உள்ளோர் கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்ட வருமானச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டையுடன் வந்து குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை தொடர்ந்து அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்க்கான புகைப்படம் எடுக்கும் பணி முதல்கட்டமாக நெல்லித்துறை, கெம்மாரம்பாளையம், வெள்ளியங்காடு ஆகிய ஊராட்சிகளில் துவக்கப்பட்டு, பின்னர் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

உதகை, செப். 6: குந்தா மற்றும் அதிகரட்டி துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இத்துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஹால்துரை தெரிவித்துள்ளதாவது:

குந்தா துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட மஞ்சூர், கீழ்குந்தா, தொட்டகெட்டா, பிக்கட்டி, முள்ளிகூர், தாய்சோலை, கோரக்குந்தா, கிண்ணக்கொரை, இரியசீகை, மஞ்சக்கொம்பை, பெங்கால்மட்டம், அரையட்டி, கோட்டக்கல், முக்கிமலை, எடக்காடு மற்றும் காயகண்டி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

அதேபோல, அதிகரட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகளின் காரணமாக அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, முட்டிநாடு, மணியட்டி, மீக்கேரி, கெக்கட்டி, ஆருகுச்சி, அணியட்டி, மேலூர், மகாராஜா, கெந்தளா, சேலாஸ், ஹாலாடாவேலி, கோடேரி, கிளிஞ்சாடா, தூதூர்மட்டம், பாரதிநகர், மஞ்சக்கொம்பை, கே.மேலூர், கொலக்கம்பை, முசாபுரி மற்றும் பொலையப்பா ஆகிய பகுதிகளிலும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.