Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வயிற்றுப்போக்கு தடுப்பு நடவடிக்கை மேட்டூர் நகராட்சி பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை

Print PDF

தினகரன்           18.08.2012

வயிற்றுப்போக்கு தடுப்பு நடவடிக்கை மேட்டூர் நகராட்சி பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை

மேட்டூர், : சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட தூக்கணாம்பட்டி மற்றும் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் 40க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிக்குள்ளாகினர்.

மாசு கலந்த குடிநீரை அருந்தியதால் அவர்கள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.இந்நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையாக குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருந்து ஊற்றி சுத்தப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் சுண்ணாம்பு பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கழிவு நீர் கலந்த குடிநீரை வெளியேற்றி விட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்த பின்னர் குடிநீர் விநியோகம் செய்யலாம் என முடிவு செய்துள்ளனர். இதன்படி, குடிநீர் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நகராட்சி சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Last Updated on Saturday, 18 August 2012 09:49