Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தண்ணீர் மூலம் பரவும் நோய்களை தடுக்க நடவடிக்கை

Print PDF

தினமணி         28.08.2012

தண்ணீர் மூலம் பரவும் நோய்களை தடுக்க நடவடிக்கை

புது தில்லி, ஆக. 27: தண்ணீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் சவீதா குப்தா கூறினார்.
 தண்ணீர் மூலம் பரவும் நோய்களை தடுப்பது தொடர்பாக மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் சிவிக் சென்டரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அதில் பேசிய சவீதா குப்தா "தில்லி ஜல போர்டு (குடிநீர் வாரியம்) விநியோகிக்கும் குடிநீரின் தரமும் கண்காணிக்கப்படும். இதற்கென அந்த வாரியத்தோடு மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றுவார்கள். பழச்சாறு, கருப்புச் சாறு கடைகள், சாலையோர உணவகங்கள் ஆகியவற்றில் விற்பனையாகும் உணவுப் பொருள்களின் தரமும் கண்காணிக்கப்படும்' என்றார். முன்னதாகப் பேசிய தெற்கு தில்லி மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ஃபராஹத் சூரி, "தண்ணீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ. 77.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ரூ. 68,000 மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. போதுமான நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொள்ளாததால் இதுவரை 25 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்' என்றார்.