Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவு பணியாற்றும் மகளிர் குழுவினருக்கு சீருடை

Print PDF

தினமணி 9.09.2009

துப்புரவு பணியாற்றும் மகளிர் குழுவினருக்கு சீருடை

திருப்பூர், செப்.8: திருப்பூர் மாநகராட்சியில் துப்புரவு பணியாற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் கட்டாயமாக சீருடை அணிய மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் 52 வார்டுகளுக்கும் போது மான துப்புரவு பணியாளர்கள் இல்லாததை அடுத்து 32 வார்டுகளில் துப்புரவு பணிக்கு மகளிர் சுயஉதவிக்குழு வினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 694 பெண் கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தலா தினமும் ரூ.100 கூலி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் குப்பை சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் சீருடைகள் அணிய வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதற்கான சீருடைகளை மகளிர் சுய உதவிக்குழுவினரே சொந்தமாக தயாரித்துக் கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 8-வது வார்டை சேர்ந்த மகளிர் சுயஉத விக்குழுவினர் சீருடையை தயார் செய்து மேயர் க.செல்வராஜிடம் திங்கள்கிழமை ஒப்புதல் பெற்றனர். கருநீல நிறமுடைய அந்த மேல்சட்டையில் மஞ்சள் நிறத்தில் குழுவின் பெயர், வார்டு எண் எழுத்தப்பட்டு ள்ளது.

இதேபோல், மாநகராட்சியில் துப்புரவு பணியாற்றும் அனைத்து மகளிர் சுய உதவிக்குழுவினரும் சீருடைகள் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.