Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை

Print PDF
தினத்தந்தி            25.03.2013

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை


நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

இதுகுறித்து நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஆர்.பரமேஸ்வரன், மாவட்ட செயலாளர் ரகீம் ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:– நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டமாக இருப்பதால் மாவட்டத்தின் சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடை உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார். அதன்படி அனைத்து வகையான பிளாஸ்டிக் கேரி பைகள் 40 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் மூடப்பட்ட பேப்பர் பிளேட்டுகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது.

அபராதம் விதிப்பு

பிளாஸ்டிக் கவர் மீது அதனை தயாரித்த நிறுவனத்தின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவை அச்சிடப்பட வேண்டும். பிளாஸ்டிக் கவர்களில் 40 மைக்ரான் எடை உள்ளவை என்ற தகவல் அச்சிடப்பட வேண்டும். 40 மைக்ரான் மற்றும் அதற்கும் மேல் உள்ள பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தும் போது, அதனை தயாரித்த நிறுவனத்தின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் முறையான பதிவேட்டினை அனைத்து கடை உரிமையாளர்களும் பராமரிக்க வேண்டும்.

மண்டல அலுவலர்கள் ஆய்வின் போது, கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால் முதன் முறையாக பயன்படுத்தும் ஒவ்வொரு அரை கிலோ பிளாஸ்டிக் பைகளுக்கும் 500 ரூபாய் வீதமும், 2–வது முறையாக அதே கடையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ஒவ்வொரு அரை கிலோ பிளாஸ்டிக் பைகளுக்கும் ரூ.750 வீதமும், 3–வது முறையாக பயன்படுத்தினால் ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

கடை உரிமம் ரத்து

இதையும் மீறி கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தினால் கடையின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தினால் அவர்களுக்கும் ரூ.100 வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.