Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெரு நாய்களுக்கு கருத்தடை பிடித்து சென்றது "புளூ கிராஸ்'

Print PDF
தினமலர்                09.04.2013

தெரு நாய்களுக்கு கருத்தடை பிடித்து சென்றது "புளூ கிராஸ்'


கும்மிடிப்பூண்டி:பேரூராட்சியில் சுற்றி திரிந்த நாய்களுக்கு, கருத்தடை சிகிச்சை அளிப்பதற்காக, "புளூ கிராஸ்' அமைப்பு சார்பில், நாய்கள் பிடித்து செல்லப்பட்டன.பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், தெருக்களில் சுற்றி திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தெரு நாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை அளிக்க, அரசு உத்தரவு பிறப்பித்தது. அத்திட்டம், "புளூ கிராஸ்' அமைப்பு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள முதல் மூன்று வார்டுகளில் நேற்று, 35 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட நாய்களின் நிறம், எந்த பாலினம், எந்த தெருவில் பிடிக்கப்பட்டது போன்ற தகவல்கள்குறிப்பெடுக்கப்பட்டு, சென்னை வேளச்சேரியில் உள்ள "புளூ கிராஸ்' அமைப்பிடத்திற்கு கூண்டு அடைத்த பேருந்தில் கொண்டு செல்லப்பட்டது.கருத்தடை சிகிச்சை அளித்தபின், பிடித்து செல்லப்பட்ட நாய்களை மீண்டும் அதே இடத்தில் விடப்படும். அதன் பின் அடுத்த மூன்று வார்டுகளில், இதேபோன்று தெரு நாய்கள் பிடித்து செல்லப்பட உள்ளன.