Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை கும்மிடிப்பூண்டி

Print PDF
தினமணி       10.04.2013

தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை கும்மிடிப்பூண்டி


கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு புளூ கிராஸ் எனப்படும் மிருக வதை தடுப்பு அமைப்பின் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி திங்கள்கிழமை துவங்கியது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் பெருகிவரும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் வண்ணம் பேரூராட்சித் தலைவர் வெ.முத்துகுமரன் பரிந்துரையின் பேரில், செயல் அலுவலர் மணிவேல், துணைத் தலைவர் கோமளா கேசவன் மேற்பார்வையில் மிருக வதை தடுப்பு அமைப்பின் மூலம் தெருநாய்களைப் பிடித்து அவைகளுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் பணி துவங்கியுள்ளது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் முதல் வார்டான கோட்டக்கரை அருகே துவங்கிய இந்த பணியின் முதல் நாளான்று சென்னை வேளச்சேரி ருக்மணி அருண்டேல் டிரஸ்டின் சார்பாக மிருகவதை தடுப்பு அமைப்பில் இருந்து ராஜேஷ், கிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்தனர்.

பிடிக்கப்பட்ட 35 நாய்கள் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவைகளுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை நடைபெற்று 10 தினங்களில் மீண்டும் கும்மிடிப்பூண்டியில் அவைகள் பிடிபட்ட இடத்துக்கே கொண்டு விடப்படும் என மிருகவதை தடுப்பு அமைப்பின் ஊழியர்கள் தெரிவித்தனர்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள 15 வார்டுகளிலும் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவைகளுக்கு கருத்தடை செய்யப்பட்டு அவைகளின் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட பேரூராட்சியின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பேரூராட்சித் தலைவர் முத்துகுமரன் தெரிவித்தார்.

இப்பணிகளை பேரூராட்சி கவுன்சிலர்கள் மலர் சந்திரன், தீனதாயளன், பேருராட்சி அலுவலர்கள் ரவி, ஆனந்தன் உட்பட்டோர் உடனிருந்து செய்தனர்.