Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வெளியேறும் நச்சு வாயு அபாயகரமானது குப்பைகளை எரித்தால் ஹார்ட் அட்டாக் வரும் இதய சிகிச்சை நிபுணர் ஷாக் தகவல்

Print PDF
தமிழ் முரசு                  29.04.2013

வெளியேறும் நச்சு வாயு அபாயகரமானது குப்பைகளை எரித்தால் ஹார்ட் அட்டாக் வரும் இதய சிகிச்சை நிபுணர் ஷாக் தகவல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: குப்பைகளை எரிப்பதால் உருவாகும் நச்சுவாயு, ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் ஒவ்வொரு நாளும் சராசரியாக

4500 டன் வரை குப்பைகள் சேருகின்றன. குப்பைகள் சேரும் இடங்களில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு சில நாட்கள் வரையும் தீ எரியும் நிலையும் காணப்படுகிறது. குப்பைகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் நச்சுவாயுவால் மாரடைப்பும் வரும்
என்ற அதிர்ச்சியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தவர் சரோஜா பாரதி. இந்திய வம்சாவளியை சேர்ந்த இதய நோய் சிகிச்சை நிபுணர். சென்னையில் இதய நோய் சிகிச்சை அரங்கு திறப்பு விழா ஒன்றுக்கு வந்துள்ள இவர், கடந்த 1970&ம் ஆண்டில் இருந்து தனது மருத்துவ அனுபவங்கள், இதய அறுவை சிகிச்சைகள், தான் சந்தித்த சிக்கலான அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு, அதை இதய நோய் சிகிச்சை அரங்கு நிர்வாகிகளிடம் அளித்துள்ளார்.

புத்தகத்தில் தான் எழுதியிருப்பது குறித்து சரோஜா பாரதி கூறியதாவது:

வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் மாசுகளால் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அதே போல குப்பைகளும் மக்களுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்துகின்றன.

குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் நச்சுவாயு உடனடியாக ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை. இந்தியாவில் இதயம் தொடர்பாக பல்வேறு விதமான நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதய நோய்களால் ஏற்படும்

இறப்புகளும் அதிகளவில் உள்ளன. எனவே குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும். குப்பைகளை எரிப்பது மிகமிக ஆபத்தானது.