Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பை பயன்பாட்டை குறைக்க கட்டணம் நிர்ணயம்

Print PDF
தினகரன்         03.06.2013

பிளாஸ்டிக் பை பயன்பாட்டை குறைக்க கட்டணம் நிர்ணயம்


ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டுகளில் தினசரி 300 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் வெண்டிபாளையம் குப்பை கிடங்கிலும், வைராபாளையம் குப்பை கிடங்கிலும் சேகரிக்கப்பட்டு உரமாக தயாரிக்கப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் தார்ரோடுகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. 40 மைக்ரான் அளவுக்குட்பட்ட பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த பைகளை பயன்படுத்தினால் மாநகராட்சி சார்பில் 100 ரூபாய் அபராதமாக உபயோகிப்பாளர்களுக்கு விதிக்கப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள் 2011 விதி எண் 10ன்கீழ் மாநகராட்சி பகுதிகளில் உபயோகிப்பாளர்களுக்கு எந்த ஒரு பிளாஸ்டிக் பைகளையும் விற்பனை செய்பவர்கள் இலவசமாக வழங்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் வகையிலும், அதன் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதன்படி 40 மைக்ரான் அளவுக்குட்பட்ட 10க்கு 11 அளவு பைகளுக்கு ரூ.2.50ம், 12க்கு 14 அளவிற்கு ரூ.3ம், 13க்கு 16 அளவிற்கு ரூ.3.50ம், 16க்கு 20 அளவிற்கு ரூ.4ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பை விற்பவர்கள் மேற்கண்ட கட்டண அடிப்படையில் தான் விலை வைத்து விற்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.