Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிப் பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

Print PDF

தினமணி               26.06.2013

மாநகராட்சிப் பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

கோவை மாநகராட்சிப் பணியாளர்களுக்கான கண் பரிசோதனை முகாமை மேயர் செ.ம.வேலுசாமி செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையில் லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் மாநகராட்சிப்பணியாளர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மேயர் செ.ம.வேலுசாமி தலைமையில் நடைபெற்ற முகாமில் ஆணையாளர் க.லதா, துணை மேயர் லீலாவதி உண்ணி, லோட்டஸ் கண் மருத்துவமனைத் தலைவர் எஸ்.கே.சுந்தரமுர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமைத் துவக்கி வைத்து மேயர் செ.ம.வேலுசாமி பேசியது:

மனிதர்களுக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதுபோல கண் பாதுகாப்பும் முக்கியம். சுமார் 4050 பணியாளர்களுக்கு கண்ணின் தன்மையை அறிய இம் முகாம் நடைபெறுகிறது. கோவை மாநகரைப் பொருத்த வரையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைக்கு இணையாக விளங்குகின்றன. மாநகராட்சி மருத்துவமனைகளில் ஏழை மக்கள் சிகிச்சை பெறும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 6 மாநகராட்சி மருத்துவமனைகள் தரச்சான்றிதழ் பெற்றுள்ளன.

மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுமார் 3000 பேருக்கு தனியார் மருத்துவமனை பங்களிப்போடு முழு உடல் பரிசோதனை செய்வதற்கு முகாம் நடத்தப்பட்டுள்ளது.

தினமும் 200 பேர் வீதம் ஒருமாதத்தில் கண் பரிசோதனை முடிந்த பின், கோவை மாநகராட்சியில் உள்ள 83 பள்ளி மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

துணை ஆணையாளர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள் கே.ஆர்.ஜெயராம் கே.ஏ.ஆதிநாராயணன், பி.ராஜ்குமார், பி.சாவித்திரி பார்த்திபன், நிலைக்குழுத் தலைவர்கள் கே.அர்ச்சுணன், எஸ்.தாமரைச்செல்வி, ஆர்.சாந்தாமணிராஜ், நியமனக் குழு உறுப்பினர் எம்.ராஜேந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.