Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி            18.07.2013

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார்


வேலூர் மாநகராட்சி 1–வது மண்டலத்தில் ஒட்டுமொத்த துப்புரவு பணியை வேலூர் மாவட்ட கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார்.

ஒட்டுமொத்த துப்புரவு பணி

மழைகாலத்தில் டெங்குநோய் வராமல் தடுபதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை இணைந்து ஒட்டுமொத்த துப்புறவு பணியை மேற்கொண்டனர்.

வேலூர் மாநகராட்சி துப்புரவு பணி தொடக்க விழா நேற்று நடந்தது.வேலூர் மாவட்ட கலெக்டர் சங்கர், துப்புரவு பணியை தொடங்கி வைத்து பேசினார்.அவர் பேசுகையில், வீடுகளில் உள்ள உடைந்த சட்டி, பால்கவர், பிளாஸ்டிக்குகள், உபயோகமற்ற டயர், கொட்டாங்குச்சி ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதேப் போல திறந்தவெளியில் உள்ள ஆட்டுக்கல், அம்மிக்கல் ஆகியவற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கும் தேங்கியுள்ள தண்ணீர் அபேட் மருந்தை போட வேண்டும்.

ஏடிஎஸ் கொசுக்கு

ஏடிஎஸ் கொசுப்புழுவை தரையில் கொட்டி அழிக்க வேண்டும், டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் வர மூலக்காரணம் ஏடிஎஸ் கொசுப்புழுதான் அதனை அழிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

துப்பரவு பணியில் பொது சுகாதாரத்துரையை சேர்ந்த 20 சுகாதார ஆய்வாளர்கள் 200 துப்புரவு பணியாளர்கள், வேலூர் மாநகராட்சியின் 2 சுகாதார ஆய்வாளர்கள் 20 துப்புரவு மேற்பார்வையாளர்கள், 100 துப்புரவு பணியாளர்கள் 15 வாகனங்களில் சென்று துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.நிகழச்சியில் மேயர் கார்த்தியாயினி, பள்ளி வளர்ச்சி குழுத்தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு, சுகாதாரத்துறை துணை இயக்குநர் பூங்கொடி, கமிஷ்னர் ஜானகி, என்ஜினியர் தேவகுமார், மண்டல குழுத்தலைவர் சுனில்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஒட்டு மொத்த துப்புரவு பணி தொடர்ந்து 4 நாட்கள் நடக்கிறது.இன்று(வியாழக்கிழமை) 2வது நாளில் 2வது மண்டல பகுதியிலும், நாளை 3வது மண்டல பகுதியிலும், 20ந் தேதி 4வது மண்டல பகுதியிலும் நடைபெறுகிறது.