Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் 62 இடங்களில் ரூ8.82 கோடியில் நவீன கழிப்பிடம் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு

Print PDF
தினகரன்             02.08.2013

மாநகராட்சியில் 62 இடங்களில் ரூ8.82 கோடியில் நவீன கழிப்பிடம் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு


ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பகுதியில் 62 இடங்களில் ரூ.8.82 கோடி மதிப்பீட்டில் நம்ம டாய்லெட் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2015ம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மனித கழிவுகள் கழிக்கும் நிலையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழுதடைந்த கழிப்பிடங்கள் பராமரிப்பு செய்தும், புதிய கழிப்பிடங்கள் கட்டும் பணிகளும் நடந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உலக தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய நம்ம டாய்லெட் கட்டப்படவுள்ளது. மாநகராட்சி பகுதியில் 62 இடங்களில் 8 கோடியே 82 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட் டில் கட்டப்படவுள்ளது.

மாநகராட்சி 1வது மண்டலத்தில் காந்திநகர் பகுதியில 9 லட்ச ரூபாய் மதிப்பிலும், பெருமாள் மலை, மாயபுரம் ஆகிய பகுதிகளில் தலா 14.20 லட்ச ரூபாய் மதிப்பிலும், ராஜீவ்நகர் பகுதியில் 14.30 லட்ச ரூபாய் மதிப்பிலும், நீலிக்கரடு பகுதியில் 2 இடங்களில் தலா 14.20 லட்ச ரூபாய் மதிப்பிலும், தட்டாங்குட்டை பகுதியில் 24.90 லட்ச ரூபாய் மதிப்பிலும், கொத்துக்காரன்புதூரில் 14.30 லட்ச ரூபாய் மதிப்பிலும், வீரபண்ணாடிபுதூர் பகுதியில் 13.90 லட்ச ரூபாய் மதிப்பிலும் கட்டப்படவுள்ளது. அம்பேத்கார்நகர், காமராஜ்நகர்,, எம்.ஜி.ஆர்.நகர், நஞ்சப்பா நகர், வன்னியர்துறை பகுதி, அன்னை சத்யாநகர், நெசவாளர் காலனி, மல்லிநகர் ஓடைப்பகுதி, கிருஷ்ணம்பாளையம் என 1வது மண்டலத்தில் 28 இடங்களில் நம்ம டாய்லெட் திட்டத்தின்கீழ் கழிப்பிடங்கள் கட்டப்படவுள்ளது. 2வது மண்டலத்தில் குளத்துப்பாளையத்தில் 3 இடங்களிலும், ஆயப்பாளி, கந்தையன்தோட்டம் பகுதியில் 2 இடங்களிலும், சூளை பகுதியில் 2 இடங்களிலும், கே.என்.கே.ரோடு, மில்வீதி உள்ளிட்ட பகுதிகளில் 11 இடங்களில் கட்டப்படவுள்ளது.

3வது மண்டலத்தில் அண்ணாநகர், கைகாட்டி வலசு ஆகிய பகுதிகளில் தலா 2 இடங்களிலும், வீரப்பம்பாளையம், சூரம்பட்டிவலசு, ஜீவாசெட், பெரியார்நகர் ஆகிய இடங்களில் தலா 2 இடங்களிலும், கல்யாணசுந்தரம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 13 இடங்களில் நம்ம டாய்லெட் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 4வது மண்டலத்தில் புதுமைக்காலனி, குமரன்நகர், அண்ணாமலை பிள்ளை வீதி, நடராஜா தியேட்டர், சோலார் சுகந்திராபுரம், நீல்கிரீஸ் ஆகிய இடங்களில் 10 இடங்களிலும் புதியதாக நம்ம டாய்லெட் கட்டப்படவுள்ளது.

மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள இந்த நம்ம டாய்லெட் அமைப்பதற்கு அரசு மானியம் பெற நகராட்சி நிர்வாக ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக கட்டுமான பணிகள் முடிந்து 5 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனம் மூலமாக பராமரிக்க டெண்டர் விடவும் மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.