Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சியில் 75 பன்றிகளை பிடித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது

Print PDF

தினமலர்              22.08.2013

திருச்சியில் 75 பன்றிகளை பிடித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது

திருச்சி: திருச்சி அரியமங்கலம் பகுதியில் சுற்றித்திரிந்த 75 பன்றிகளை ஒரே நாளில் பிடித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

திருச்சி மாநகர பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி உத்தரவிட்டார். மாநகரில் பன்றிகளை பிடித்துக் கொண்டு செல்ல ஒப்பந்ததாரர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து திருச்சி அரியமங்கலம் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடிக்க, மாநகராட்சி நகர் நல அலுவலர் அல்லி தலைமையில், 5 சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில், போலீஸ் பாதுகாப்புடன் பன்றிகளை பிடிக்கும் பணி நேற்று நடந்தது.

மேல அம்பிகாபுரம், கீழ அம்பிகாபுரம், அண்ணா நகர், காவேரி நகர், ரயில்நகர், ராஜப்பா நகர், திடீர் நகர், பொன்முத்து நகர் பகுதிகளில் 20 பேர் குழுவினரால் 75 பன்றிகள் பிடிக்கப்பட்டது.

இதேபோல், "மாநகரில் பன்றி வளர்ப்பவர்கள், தங்களது பன்றிகளை மாநகரை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்' என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.