Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை முழு­வதும் 750 இடங்­களில் ‘நம்ம டாய்லெட்’

Print PDF

தினமலர்              26.09.2013

சென்னை முழு­வதும் 750 இடங்­களில் ‘நம்ம டாய்லெட்’

சென்னை:தாம்­பரம் நக­ராட்­சியில் அறிமுகப்­ப­டுத்­தப்­பட்ட, ‘நம்ம டாய்லெட்’ நவீன கழிப்­பறை திட்­டத்தை சென்னையில், 750 இடங்­களில் அமைக்க மாந­க­ராட்சி முடிவு செய்து உள்ளது. அதே­நேரம், மாநகராட்­சியின் இலவச கழிப்­ப­றை­களில் நடக்கும் வசூல் வேட்டையை தடுக்க இது­வரை எந்த நடவடிக்கையும் எடுக்­கப்­பட­வில்லை.

திடீர் முடிவு

சென்னை மாந­க­ராட்‌சியில் தற்­போது, 900 பொதுக் கழிப்­ப­றைகள் உள்­ளன. இவற்றில் பல கழிப்­பறைகள் பயன்­பாட்­டிற்கு உத­வாத நிலையில் உள்­ளன.

சமீ­பத்தில் அவை சீர­மைக்­கப்­பட்­டன. மாந­க­ராட்சி கூட்­டங்­களில், கழிப்­ப­றைகள் இல­வசம் என, மேயர் அடிக்­கடி அறி­வித்­தாலும், அவை இன்னும் கவுன்­சி­லர்­களின் கட்­டுப்­பாட்டில் வசூலை வாரி குவித்து வரு­கின்­றன. இந்த நிலையில், தாம்­பரம் நக­ராட்­சியில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட, ‘நம்ம டாய்லெட்’ திட்­டத்தை சென்னை முழு­வதும் அறி­மு­கப்­படுத்த மாந­க­ராட்சி முடிவு செய்துள்­ளது.

முதற்­கட்­ட­மாக 750 இடங்­களில் ‘நம்ம டாய்லெட்’ அமைய உள்­ளது. அதற்­காக பொது­மக்கள் அதிகம் கூடும் பகு­திகள், பேருந்து நிலை­யங்கள், மார்க்கெட், ரயில் நிலையம், கழிப்­ப­றைகள் பயன்­ப­டக்­கூ­டிய பகு­திகள் அடை­யாளம் காணப்­பட்டு வரு­கின்­றன.

விரைவில் இந்த திட்டம் செயல்­பாட்­டிற்கு வரும் என்று மாந­க­ராட்சி அதி­காரி ஒருவர் தெரிவித்தார். நம்ம டாய்லெட்’ திட்டத்தை செயல்­ப­டுத்­து­வதில் மாநகராட்சி மூன்று வழி­மு­றை­களை வகுத்துள்ளது. கட்­டுதல், பரா­ம­ரித்தல், ஒப்படைத்தல் ஆகிய மூன்றையும் ஒரே நிறு­வ­னத்­திற்கு வழங்­குதல், அந்த நிறுவனம் விளம்­பர வரு­வாயை ஈட்டிக் கொள்­ளலாம்.

கட்­டுதல், பரா­ம­ரித்தல் ஒரு நிறுவ­னத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­படும். அதற்கு மாந­க­ராட்சி பணம் வழங்கும். விளம்­பர வரு­வாயை மாந­க­ராட்சி நேர­டி­யாக ஈட்டும்.

கட்­டுதல் ஒரு நிறு­வ­னத்­திற்கும், பரா­ம­ரித்தல் ஒரு நிறு­வ­னத்­திற்கும், விளம்­பர வருவாய் ஈட்­டுதல் ஒரு நிறு­வ­னத்­திற்கும் வழங்­கு­வது இவற்றில் ஒன்றை, தேர்ந்­தெ­டுக்க மாந­க­ராட்சி திட்ட­மிட்­டுள்­ளது.

சென்­னையில், ‘நம்ம டாய்லெட்’ செயல்­பாட்­டிற்கு வந்தால், தனியார் நிறு­வ­னத்தின் பராமரிப்பில் அது இருக்கும். அங்கு கவுன்­சி­லர்கள் ஆட்­களை நிய­மித்து வசூல் செய்ய முடி­யாது என்­பதே, இந்த திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வதின் முக்­கிய நோக்கம்.

எதிர்பார்ப்பு

அதே நேரம், தற்­போ­துள்ள கழிப்­ப­றை­களில் நடக்கும் வசூலை எப்­படி தடுப்­பது என்­பது குறித்தும் ஆலோ­சனை நடத்­தப்­பட்டு வருகிறது.

அதி­க­மாக வசூ­லாகும் கழிப்­பறைகள், அவற்றில் வசூல் நடத்தும் கவுன்­சி­லர்கள் பட்­டியல் தயா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது.

இந்த பட்­டி­யலை முதல்­வரின் கவ­னத்­திற்கு கொண்டு சென்று, அடா­வடி கவுன்­சி­லர்கள் மீது நட­வ­டிக்கை எடுத்தால், கழிப்­பறை வசூலை தடுக்க முடியும் என்றும் மாந­க­ராட்சி உயர் அதி­கா­ரிகள் எதிர்பார்க்­கின்­றனர்.