Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருமங்கலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி தீவிரம்

Print PDF
தினகரன்             26.09.2013

திருமங்கலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் நகராட்சி தீவிரம்


திருமங்கலம், : டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் திருமங்கலம் நகராட்சி தீவிரம் காட்டி வருவதாக ஆணையாளர் முகமதுசிராஜூதீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

நகராட்சியில் 27 வார்டுகளிலும் கொசுக்களினால் பரவக்கூடிய டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் நீரினால் பரவக்கூடிய நோய்கள் பராவமல் தடுக்க 21 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். துப்புரவு ஆய்வாளர் மேற்பார்வையில் துப்புரவுபணியாளர்கள், நகர் சுகாதாரசெவிலியர்களுடன் இணைந்து குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் தினமும் 2500 வீடுகளில் வீதம் வீடுவீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு மருந்தான அபேட் தெளித்து வருகின்றனர். இதே போல் நகரில் தொடர் காய்ச்சல், வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டுள்ளோர்களின் விவரங்களையும் இந்த குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

தொடர் காய்ச்சல் இருந்தால் அந்தநபரினை அடையாளம் கண்ட அரசுமருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காமலும், உபயேகமற்ற பொருள்களான தேங்காய் ஓடுகள், டயர்கள், பேப்பர் கப்புகள் ஆட்டு உரல் ஆகியவற்றில் நீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.