Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம்

Print PDF

தினமணி           15.10.2013

கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம்

நொச்சி செடி​க​ளைப் பெறு​வ​தற்கு இணை​ய​த​ளம் மூலம் பொது​மக்​கள் விண்​ணப்​பிக்​கும் வச​தியை செயல்​ப​டுத்த சென்னை மாந​க​ராட்சி முடிவு செய்​துள்​ளது.​

​ சென்​னை​யில் கொசுக்​களை கட்​டுப்​ப​டுத்​தும் வகை​யில் நீர்​வ​ழிப்​பா​தை​க​ளின் கரை​க​ளில் நொச்சி செடி​கள் வளர்க்​கப்​ப​டும் என்று மாந​க​ராட்சி நிதி​நிலை அறிக்​கை​யில் தெரி​விக்​கப்​பட்​டி​ருந்​தது.​ ​

​ இது குறித்து மாந​க​ராட்சி அதி​கா​ரி​கள் கூறி​யது:​ சென்​னை​யில் கொசுக்​களை ஒழிக்க நொச்சி செடி​களை வளர்க்க நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கி​றது.​ இதற்​கான பணி​யாணை வழங்​கப்​பட்​டுள்​ளது.​

​ முதல் கட்​ட​மாக 5 லட்​சம் செடி​கள் நடப்​ப​டும்.​ வரும் டிசம்​பர் மாதத்​துக்​குள் நொச்சி செடி​களை நடும் பணி​கள் தொடங்​கப்​ப​டும்.​

மேலும் பொது​மக்​கள் தங்​கள் வீடு​க​ளில் நொச்சி செடி​களை வளர்க்க நினைத்​தால் மாந​க​ராட்​சியை அணு​க​லாம் என்​றும் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​

​ இதற்​காக இணை​ய​த​ளம் மூலம் பொது​மக்​கள் விண்​ணப்​பிக்​கும் வச​தி​யைத் தொடங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.​ இது தொடர்​பான பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.​ விரை​வில் இந்த வசதி தொடங்​கப்​ப​டும் என்று அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர்.​